வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிதம்பரத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் மாயமான மர்மம் நீடிப்பு:  5 மாதங்கள் கழித்து அவரது செல்போன் கண்டுபிடிப்பு

சிதம்பரம் முத்துமாணிக்க நாடார்தெருவில் வசிக்கும் தொழிலதிபர் முகமதுயாசின் மகன் முகமதுபைசல் (21). இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பிகாம் இராண்டாம் ஆண்டு பயிலுகிறார். கடந்த 2012 அக்டோபர் மாதம்.7-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிதம்பரத்திலிருந்து திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கல்லூரிக்கு சென்றுள்ளார். மாலை 5

News image
Updated On :13 பிப்ரவரி 2013, 12:40 pm

G.Sundararaj

சிதம்பரத்திலிருந்து கடந்த 2012 ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதி திருச்சி சென்ற கல்லூரி மாணவர் ஒருவர் காணாமல் போனார்.  இதுகுறித்து சிதம்பரம் நகர போலீஸார் வழக்குப் பதிந்து தேடி வந்தனர். ஆனால் எந்தவித தகவல் கிடைக்காமல் அவர் மாயமான மர்மம் நீடித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்கள் முன்பு அம்மாணவரின் செல்போன் நாகப்பட்டினம்-காரைக்காலுக்கு இடையே உள்ள வாஞ்சூர் செக்போஸ்ட் அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் முத்துமாணிக்க நாடார்தெருவில் வசிக்கும் தொழிலதிபர் முகமதுயாசின் மகன் முகமதுபைசல் (21). இவர் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் பிகாம் இராண்டாம் ஆண்டு பயிலுகிறார். கடந்த 2012 அக்டோபர் மாதம்.7-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிதம்பரத்திலிருந்து திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் கல்லூரிக்கு சென்றுள்ளார். மாலை 5 மணிக்கு கல்லூரிக்கு சென்றுவிட்டதாக பெறறோருக்கு தகவல் தெரிவித்துள்ளார். பிறகு அக்.8-ம் தேதி அன்று அதிகாலை 5.09 மணிக்கு மாணவர் முகமதுபைசல் செல்போனிலிருந்து அவரது தந்தை செல்போனிற்கு உங்களது மகனை கடத்தியுள்ளோம் என மர்மநபர்கள் பேசியுள்ளனர். இதுகுறித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் அவரது தந்தை முகமதுயாசின் புகார் அளித்துள்ளார். ஆனால் 5 மாதங்களாகியும் இன்று வரை மாணவர் கிடைக்கவில்லை.

கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மகனை பற்றி எத்தகவலும் வராததால், அவரது பெற்றோர்கள் வேதனையிலும், மன உளைச்சலுக்கும் ஆளாகியுள்ளனர். கல்லூரி மாணவர் மாயம் குறித்து தமிழக முதல்வர் இப்பிரச்சனையில் தலையிட்டு மாணவர் முகமதுபைசலை சிறப்பு காவல் படை அமைத்து கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என முதல்வருக்கு சிதம்பரம் எம்எல்ஏ கே.பாலகி்ருஷ்ணன் 29-1-2012ல் கடிதம் அளித்துள்ளார்.  தற்போது நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்திலும் பேசியுள்ளார்.

இந்நிலையில் மாணவரின் பெற்றோர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேப்பியல் ஹார்பஸ் (ஆட்கொணர்வு மனு) தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கல்லூரி மாணவர் முகமது பைசலை கண்டிபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டார். மாணவரை கண்டுபிடிக்க முடியாமல் திணறும் சிதம்பரம் போலீஸார், சென்னை உயர்நீதிமன்றத்தில் 3 முறை காலஅவகாசம் பெற்றனர். இந்நிலையில் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்லூரி மாணவர் மாயமான மனு மீதான மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி வருகிற திங்கள்கிழமைக்குள் மாணவரை கண்டுபிடித்து ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் 5 மாதங்கள் கழித்து அம்மாணவரின் செல்போன் கிடைத்துள்ளதால் மாணவர் என்னவானார் என விசாரணையில் தெரியவரும் என போலீஸார் தரப்பில் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.